தற்போதைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரை உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிக்கப்படவுள்ளது.
2262/8 இலக்கம் கொண்ட இதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்படுகிறது.
இது தொடர்பான தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு!
