அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி திருத்த சட்டமூலத்தில் பல புதிய திருத்தங்களைச் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்டப்டபோது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிரியந்த ஜெயவர்தன, குமுடுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவர் அடங்கிய நீதிரயசர் குழு முன் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டன. மூத்த வழக்கறிஞர் நிர்மலன் விக்னேஸ்வரன் சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரானார்.
மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விரிவாக சாட்சியம் அளித்தார்.
இந்த சட்டமூலத்தை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
