உப்புக்குத் தட்டுப்பாடு இல்லை!

எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை அடுத்து நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவி வருவதாகவும், இந்தத் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பல் தீபிடித்ததால் அதன் சிதைவுகள், இரசாயனம் என்பன கடலுடன் கலந்துள்ளதால் உப்பு உற்பத்திக்கு ஏற்பட்டு உப்புத் தட்டுப்பாடு நிலவும் என தகவல் பரவி வருவதாகவும், இதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உப்பு உற்பத்தியில் எவ்வித தடையும் இல்லை எனவும் இதனால் உப்புக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply