ஒரே நாடு ஒரே சட்டம் வார்த்தையில் மட்டும்?

யாழ்ப்பாணத்தில் கோவில் தேர்த்திருவிழாவை ஏற்பாடு செய்தமையினால், குறித்த ஆலய நிர்வாகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழாவை ஏற்பாடு செய்தமைக்காக குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதுகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து காரசாரமான கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறுவது வார்த்தையில் மட்டுமே இருக்கிறது. யாழ் தேர்த் திருவிழாவை ஏற்பாடு செய்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல நுவரெலியாவில் பெருந்திரளான மக்கள் கூடிய நிகழ்ச்சி குறித்து யாரும் கைதுசெய்யப்படவில்லை. கேள்வியெழுப்பவில்லை உள்ளிட்ட கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.

இதேவேளை, மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இதுகுறித்து டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

‘நாம் சட்டங்களை சமமாக நடைமுறைப்படுத்துகின்றவர்களாயின் நுவரெலியாவில் பந்தய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தவர்களை ஏன் கைதுசெய்யவில்லை. அவர்களுகு;கும் கைதுசெய்யப்பட வேண்டும் அல்லவா” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.

Leave a Reply