ஜெனிவா சவாலில் அவமதிப்புக்கு எதிரான நம்பிகை

மனித உரிமைகள் பேரவையானது சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதங்கள் ஒன்றையொன்று சந்தித்து எதிர்கொள்ளும் இடமாகும்.

“ஹே ஜெனிவா. நாம் இப்போது கொல்வதில்லை” “இனி மேல் நாம் சுடுவதில்லை” “ எமது தீவை எமக்கு திருப்பித்தாருங்கள்” என்று பலமான சிங்கள வார்த்தைகளில் புலம்புகிறார் அஜித் குமாரசிரி (இவர் இலங்கையில் உள்ள ஒரு பாடலாசியர் மற்றும் இசையமைப்பாளர்).

இலங்கையர்களின் மனங்களை ஜெனிவா என்ற சொல் பற்றிப் பிடித்துள்ளது. பல இலங்கையர்களை, குறிப்பாக சிங்களவர்களைப் பொறுத்தவரை அது தேசிய கௌரவத்தின் மீதான ஒரு தாக்குதல். அவர்களது சிறிய தீவின் பலவீன நிலை சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் இடம் என்பதாக உள்ளது. தமிழர்கள் பலருக்கும் இப்போது முஸ்லிம்களுக்கும் அது ஒரு நம்பிக்கை தரும் இடம். உலகளாவிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பொறுத்தவரை அது அவர்களது மன்றம்.

சூழ்நிலை

ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையானது சிங்கள மற்றும் தமிழ் தேசியவாதங்கள் ஒன்றையொன்று சந்தித்து எதிர்கொண்டு பல கற்பனைச் சண்டைகளில் ஈடுபடும் இடமாகும். பேரவையின் சில பக்க நிகழ்வுகளில், கொரோனா காலத்துக்கு முன்னர் சிலர் மயங்கி விழுந்துள்ளனர். சிலர் கைகலப்பில் ஈடுபட்டு ஐ.நா பாதுகாப்பு பிரிவினரால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் யுத்தத்தின் விளைவுகளை ஞாபகப்படுத்தும் காலில்லாத நாற்காலிக்கு அருகே இரு சமூகத்தினரும் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதுண்டு. தமது ஆதரவாளர்களுக்காக அங்கு காரசாரமான, இரத்தத்தை உறைய வைக்கும் பேச்சுக்கள் இடம்பெறும். பார்வையாளர்களைப் பொறுத்தவரை இந்த நாடகத்தின் பெரும் பகுதி அவர்களை நிலை குலையச் செய்து விடும் என்பதே யதார்த்தமாகும்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ஜெனிவா நடைமுறையைப் பொறுத்தவரை தமது தரப்பு விடயத்தை இரண்டு படிநிலைகளைக் கொண்ட பூதாகரமான விசையாற்றலுடன் கூடிய விடயமாக சமர்ப்பிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

இலங்கை சீனாவுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருப்பதால் மேற்குலக நாடுகள் அதற்கு எதிராக அணி திரள்கின்றன. ஏகாதிபத்தியம் மற்றும் மாறுபட்ட காலனித்துவ கோட்பாடு ஆகியவையே இறுதியில் மிஞ்சுகின்றன. எந்தவொரு பாதிப்போ அல்லது பாதிக்கப்பட்டவரோ இல்லை என்ற அரசாங்க அங்கீகாரம் கிடையாது. இது உணர்வற்ற தன்மையை கூட்டுகிறது.

அரசாங்கத்தின் இவ்வருடத்துக்கான நோக்கம் ஜெனிவாவில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படக்;கூடாது என்பதாகும். அதே நேரம் பிரபல தமிழ் குழுக்களைப் பொறுத்தவரை அவர்களது எண்ணம் மனித உரிமைகள் பேரவையானது இம்முறை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான பாதையைத் திறந்துவிடவேண்டும் என்பதாகும்.

எனினும் இறுதியில் யுத்தக் குற்றங்கள் மட்டுமன்றி வேறு பல ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டம் தொடர்பான பாரதூரமான மீறல்கள் ஆகியவை பற்றிய சாட்சியங்களை சேகரிக்கும், அவற்றை பாதுகாக்கும் மற்றும் அவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்துக்கு பாரப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கான திகதியோ கால எல்லையோ தீர்மானிக்கப்படவில்லை.

பூகோள அரசியலுக்கு ‘மேலதிகமாக’.

மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் எடுப்பதற்கு பூகோள அரசியலே அடிச்சட்டமாக இருக்கும் நிலையில், உண்மையான நடைமுறை மேலும் நுட்பமாக பூகோள அரசியலுக்கும் ‘மேலதிகமாக’ என்று விபரிக்கப்படுகிறது.

இந்த ‘மேலதிகமாக’ என்ற காரணியை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் மனித உரிமைகள் பேரவையின் முறையான செயற்பாட்டை அவர் தெரிந்த கொள்ள முடியாது. இந்த ‘மேலதிகமான’ என்ற காரணி உருவாக்கியிருக்கும், தீர்மானமொன்றைச் சுற்றியுள்ள செயற்பாடு, கிளர்ச்சி மற்றும் வேகமானது கசிந்து குறிப்பிட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கான சூழலை உருவாக்குகிறது.

இலங்கையின் தீர்மானத்தை சுற்றியுள்ள ‘மேலதிகமான’ காரணிகள் எளிதாக இனங்காணப்படக்கூடியவை. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலய சட்ட வல்லுனர்கள் முதலில் வந்தனர். அத்துடன் விசேட அறிக்கையாளர்கள் மற்றும் நடைமுறையாளர்கள் பலமான இடங்களில் அமர்ந்துகொண்டனர்.

அலுவலகத்தின் முக்கிய உள்ளீடு ‘இலங்கையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்’ என்ற உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கையாக இருந்தது. உயர் ஸ்தானிகராகவும். சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவராகவும், தலைவராகவும் மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் மிச்செல் பெச்லெட், அறிக்கையினது பொறுப்புப் பளுவை முழுமையாக சுமந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரது அறிக்கையும் அதில் பொதிந்திருந்த சொற்களும் தீர்மானத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக செய்து விட்டன.

ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராலயத்தின் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக, தமிழ் குழுக்கள் தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் தீவிரமாக செயற்பட்டன. ஆனால் முஸ்லிம் சமூகம் மற்றும் புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் இத் தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்களது வேட்கை, ஆற்றல் மற்றும் அநீதிக்கு எதிரான உணர்வு ஆகியவை இருந்த வெற்றிடங்களை நிரப்பிவிட்டன.

பாகிஸ்தானின் (இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக ஜெனீவாவில் பிரதிநிதித்துவம்) மற்றும் பங்களாதேஷின் பலமான ஆதரவு இருந்த போதிலும், சீனாவின் அழுத்தத்துக்கிடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மார்ச் மாதம் பங்களாதேஷ_க்கு விஜயம் செய்திருந்த நிலையிலும், இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்புகளை எடுத்திருந்த போதிலும் முஸ்லிம் நாடுகள் பல வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்தன.

உலகளாவிய காரணத்துக்கான கூறுகள்

புலம் பெயர் அமைப்புகள் எப்போதுமே தீவிர செயற்பாட்டில் உள்ள நிலையில், இம்முறை மனித உரிமைகள் பேரவையில் கிளர்ச்சி மிகு இடத்தை அதிகமாக பிடித்துக் கொண்டது முற்றிலும் வேறான குழுக்கள் ஆகும். இந்த குழுக்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவை ஆனால் உலகளாவிய விடயங்கள் என்று வரும் போது அவை ஒற்றுமையை காட்டுகின்றன.

இலங்கை மீண்டும் உலகளாவிய காரணமாக மாறியுள்ளது. சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் ஒரு முறை நுழைந்து விட்டால் அதில் இருந்து விலகுவது கஷ்டமானதாகும். கருத்துப் பரிமாற்றங்களில் ஒரு வகை குறியீடு உள்ளது. இது நாட்டுக்கும் சமூகத்துக்கும் மிகுந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச சட்டம் மற்றும் அரசியல் பொருளாதாரம் தொடர்பான கல்விமான் கிறிஸ்டின் ஸ்கொவெபெல் பட்டேல் அண்மையில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனீவாவில் இடம்பெறும் நிகழ்வுகள் அவற்றின் குறும்பார்வை காரணமாகவே குழப்ப நிலையில் உள்ளன. இலங்கை இதே போன்றவொரு நிலையை 2014 இல் விரோதப் பகைமையுடன் கூடிய பேரவைக்கூட்டத் தொடரில் எதிர்கொள்ள நேர்ந்தது. சர்வதேச முறைமையில் இருந்து வெளி;யேறும் நிலையை அது ஒத்திருந்தது. இந்த நிகழ்வை பெரும்பாலானோர் இப்போது மறந்துள்ளனர்.

இலங்கையில் அரசாங்கம் மாறியதையடுத்து அது மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் இணை அனுசரணை செய்த தீர்மானமானது அது விழுந்திருந்த குழியில் இருந்து அதனை மீட்டெடுத்தது. அந்த தீர்மானம் மட்டும் நிறைவேறாமல் இருந்திருந்தால் சாட்சியங்களை சேகரிக்கும் மற்றும் பாதுகாக்கும் பொறிமுறையை 2016 இலேயே எந்த வகையிலாவது இலங்கை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும்.

2015 இல் எடுக்கப்பட்ட தீர்மானம் சர்வதேச சிறந்த பயிற்சிகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தது. காணாமற்போனவர்களுக்கு ஒரு அலுவலகம், இழப்பீடு கொடுப்பதற்கு ஒரு அலுவலகம். ஒரு உண்மை கண்டறியும்; ஆணைக்குழு மற்றும் பாரதூரமான குற்றங்களில் குற்றவாளியானோர் தொடர்பான சட்ட நடைமுறை ஆகியவை இதன்போது கிடைத்தன.

அப்போதைய நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு முறைமை தேவை என்பதே நோக்கமாக இருந்தது. உள்ளுர் நடைமுறைகள் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தரவில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் தெளிவாக உணர்ந்தனர். இதன் காரணமாக வெளிநாட்டு பங்களிப்பினை மூலமாகக் கொண்ட வரைச்சட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

30ஃ1 என்ற சர்வதேச தீர்மானம் நடைமுறைப் படுத்தப்படாததால் அது தோல்வியடைந்து விட்டதாக பாதிக்கப்பட்ட குழுக்கள் நிiனைத்த போதும் அது பெருமளவில் வெற்றியளித்தது. சர்வதேச பகைமையுணர்வு மறைந்தது. இலங்கை சர்வதேச தண்டனை நிகழ்ச்சி நிரல்களில் இருந்து கைவிடப்பட்டது.

ஜி.எஸ்.பி மற்றும் அது போன்ற வர்த்தக மற்றும் நிதிச் சலுகைகள் மீண்டும் கிடைத்தன. ஐ.நா. அமைதி காக்கும் படையில் மீண்டும் இலங்கைக்கு இடம் கிடைத்தது. அதன் சர்வதேச வெற்றிக்கிடையிலும் 30ஃ1 தீர்மானமானது தேசிய ரீதியில் பழி வாங்கப்பட்டு ‘படை வீரர்களுக்காக விலை பேசப்பட்டது’. யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு சிலர் மற்றும் யுத்தக் குற்றங்களில் ஈடுபடாத பெரும்பாலானோருக்குமிடையிலான கோடுகள் தெளிவற்றதாக்கப்பட்டன.

அதே நேரம், அடிப்படையில் இணை அனுசரணை என்பது எதைக் குறிக்கிறது என்பதைப்பற்றியும் அது உள்ளடக்கிய தெளி;வூட்டும் சுய நலன் பற்றியும் ஒரு தெளிவின்மை இருந்தது.

இணை அனுசரணை என்பது எப்போதுமே சர்வதேச தர நிலைகளை ஏற்றுக் கொள்வதுடன் தேசிய நடைமுறைகளை – இயற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் நியமிக்கப்படவுள்ள நபர்கள் ஆகியவற்றை – கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதாகும்.

தீர்மானத்தில் இருந்து தன்னிச்சையாக விலகிக் கொண்டதன் மூலம் சாட்சியங்களை சேகரிக்கவும் பாதுகாப்பதற்குமான புதிய பொறிமுறையை மனித உரிமைகள் பேரவை உருவாக்க இலங்கை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நடைமுறை இப்போது கொழும்பு அரசாங்கத்துக்கு வெளியே உள்ளதுடன் அதன் செயற்பாடுகள் இறுதியில் அத நினைத்தவாறே அமையும்.

இரண்டு தரப்பினர்

மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகராலய அலுவலகத்தின் அர்ப்பணிப்புக்குரிய திறன் காரணமாக இலங்கை தொடர்பான மனித உரிமைகள் விவகாரங்கள் விலகிச் செல்ல முடியாது. இலங்கையர்கள் பலருக்கு, குறிப்பாக சிங்களவர்களைப் பொறுத்தவரை இது இரு பக்க தர நிலைகளுக்கு விடுக்கப்பட்ட அவமதிப்பாகும். அவர்கள் பார்வையில் உலகளாவிய சமமின்மையாக இருப்பவை அவர்களுக்கு உண்மையில் கோபமூட்டுகின்றன.

அரச கண்காணிப்பின் கீழ் தாங்கள் அன்றாடம் துன்புறுத்தப்பட்டு. தங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, மற்றும் மிரட்டப்படும் சிறுபான்மை அங்கத்தவர்கள் பலருக்கு, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, ஊடகவியலாளர்களுக்கு, சட்டத்தரணிகளுக்கு, பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு, யாரோ தங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வரும்போது அவர்களுக்கு அது ஓரளவு நிவாரணம் தருவதாக இருக்கும்.

ராதிகா குமாரஸ்வாமி முன்னாள் கீழ் செயலாளர் நாயகமும் சிறுவர் மற்றும் ஆயுதப் போர் தொடர்பான செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியுமாவார்.

Leave a Reply