இலங்கையின் நிதி வரலாற்றில் விசேட நாள் இன்று

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாயாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டு வந்தது.

அந்த வகையில் கடந்த வாரம் இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக 201. 77 ரூபாயாக இருந்தது.

எனினும் இன்று மேலும் அதிகரித்து 202.04 ரூபாயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply