ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் மாநில உரிமைக்கான உலக சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி ஐரோப்பா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் புலம்பெயர்ந்தோர், கடந்த திங்கள்கிழமை சுவிட்சர்லாந்தில் கூடி ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளிலும் இருந்து பல தமிழ் மக்கள் கூடியிருந்தனர்.
ஊர்வலம் பிற்பகல் 2:00 மணிக்கு ஜெனீவாவின் க்ரொப்பீடி பூங்காவில் தொடங்கி பிற்பகல் 3:30 மணிக்கு ஐ.நா முன் முடிந்தது.
