You are currently viewing கொரோனா காலங்களில் இலங்கைசார்பான நிலவரங்கள்

கொரோனா காலங்களில் இலங்கைசார்பான நிலவரங்கள்

அறிமுகம்

One Text Initiative (OTI)எனும் அமைப்பானது இணக்கத்தின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை மேம்படுத்தும், அரசியற் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் வசதிப்படுத்துநர் ஒன்றாக உள்ளது. கொள்கைச் சவால்களை விளங்கிக்கொள்வதற்கும் கட்சிகளுக்கிடையிலான இணக்கத்தினை உருவாக்குவதற்கான துறைகளை இனங்கண்டுகொள்வதற்குமான OTI இன் அணுகுமுறையின் மையப்பகுதியில் நிலவர உருவாக்கம் உள்ளது. கொவிட் – 19 உலகளாவிய நோய்த்தொற்று நிகழ்வு மற்றும் இதற்கான அரசாங்கத்தின் துலங்கல் என்பன இலங்கையின் அரசியற் பொருளாதாரத்தையும் கலாசார தோற்றப்பாட்டையும் முன்னெப்போதுமில்லாத விதத்தில்வடிவமைத்து வருவதனால், எதிர்கால நிலவரங்களை எதிர்வுகூறும் பொருட்டு மதியுரைசார் நிலவர உருவாக்கச் செய்முறையொன்றை OTI நடைமுறைப்படுத்தியது.சகல பிரதான அரசியற்கட்சிகளுடனும் சேர்ந்து,OTI மன்றத்திலுள்ள அவர்களின் பிரதிநிதிகள் அதேபோல சுயாதீன நிபுணர்கள் ஆகியோருக்கூடாக மதியுரைசார் செய்முறை ஒன்றுக்கூடாக நிலவரங்கள் இனங்காணப்பட்டன. பின்னணித் தகவல்கள், சூழ்நிலை மதிப்பீடு மற்றும் முரண்பாட்டுத் திட்ட உருவாக்கம், எதிர்கால நிலவரத் திட்டமிடல் மற்றும் தந்திரோபாய எதிர்வுகூறல் ஆகியவற்றுடன்கூடிய நிலவரங்களை காலக்கிரமமாக மதிப்பீடு செய்வதற்கும் இற்றைப்படுத்துவதற்கும் தந்திரோபாய தலையீடுகளுக்கான மாதிரிகள், முறைகள் மற்றும் கருவிகளை உருவாக்குவதற்கும் அத்துடன் மாற்றீடான நிலவரங்களை உருவாக்குவதற்கும்OTI எதிர்பார்க்கின்றது.

OTI நிலவரங்களை யாவை?

நிலவரங்களுக்கான OTI அணுகுமுறையானது, நாளை உலகு பரிணாமம் அடையக்கூடிய வழி பற்றிய சாத்தியமான வரலாறுகளாக அவற்றைக் கருதுகின்றது.சூழ்நிலையொன்று எதிர்காலத்தில் எவ்வாறு பரிணமிக்கக்கூடும் என்பது பற்றிய எண்ணிறைந்த சாத்தியப்பாடுகள் உள்ளதால் எந்தவொரு நிலவரமும் எதிர்காலத்தின் திட்டவட்டமான எதிர்வுகூறல்களாக காணப்படவில்லை.உண்மையில் இடம்பெறக்கூடியதாவது எண்ணற்ற காரணிகள் மற்றும் செயற்படுநர்களுக்கு இடையிலான இடைச்செயற்பாட்டின் பயன்விளைவு ஒன்றாக உள்ளபடியால் எதிர்பார்ப்பின் நம்பத்தகுந்த விபரமொன்றை நிலவரங்கள் தருகின்றன. அத்தகையதொரு விபரமானது பொதுவாக நிகழ்கால மற்றும் வரலாற்றுப் போக்குகளினதும் நிகழ்வுகளினதும் நீடித்த பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பின்வரும் நிலமைகளில், சனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் எதிர்காலப் பாதைக்கான நிகழ்வொன்றாக கொவிட்-19 கருதப்படுகின்றது. அப்படிப்பட்டதாக, உடனடிச் சாத்தியப்பாடுகள் மீதான ஒரு கவனக்குவிப்புடன், இவ் அரசாங்கத்தின் ஐந்து வருட காலப்பகுதிக்கு நான்கு சாத்தியமான நிலவரங்கள் எதிர்வுகூறப்பட்டுள்ளன. இந்நிலவரங்களானவை கொவிட்–19 உலகளாவிய நோய்த்தொற்று நிகழ்வு ஏற்பட்டதிலிருந்து இலங்கையின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக-கலாசார பரப்புக்களிலுள்ள சாத்தியமான அபிவிருத்திகளை பரந்துபட்ட அளவில் உள்ளடக்குகின்றன.

OTI நிலவர உருவாக்க முறைமை

சகல பிரதான அரசியற்கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் OTI பங்காளர்களுடன் சேர்ந்து ஒரு பரந்துபட்டசிந்தனைக் கிளறல் மற்றும் மதியுரைசார் செய்முறையினை OTI மேற்கொள்கின்றது.2010 ஆம் ஆண்டில் விருத்திசெய்யப்பட்டதும் அத்துடன் அப்போதிருந்து அரசியல் மற்றும் சமூகப் பயன்விளைவுகளை எதிர்வுகூறுவதற்கு வெற்றிகரமாகப் பிரயோகிக்கப்பட்டுள்ளதுமான OTI இற்கு தனியுடமையான OTI நிலவர உருவாக்ககருவித்தொகுதியை (Toolkit)OTI பயன்படுத்துகின்றது. பரந்துபட்ட வீச்சினையுடைய அபிவிருத்திகள், வழிகள் தொடர்பானவற்றிலிருந்தான உள்ளீடுகளின் சேகரிப்பை இச்செய்முறை உள்ளடக்குவதுடன் அரசியற்கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களை உள்வாங்கும் சிந்தனைக் கிளறல் செய்முறையொன்றைப் பயன்படுத்தி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன.இவ் உள்ளீடுகளானவைபிந்திய இருமக்கூறுகளுக்கான (later binary)இயக்கிகள், செயற்படுத்திகள் மற்றும் காரணிகளாகவும் OTIஇன் இணைத் தரப்படுத்தல் அணுகுமுறைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.நான்கு நிலவரங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இலங்கையின் சமூக-அரசியற் சூழலின் தற்கால வழிமுறைகளானவை அடுத்த ஐந்து வருடங்களில் இவ் இனங்காணப்பட்ட நிலவரங்களில் ஏதேனுமொரு நிலவரத்திற்கு இட்டுச்செல்லக்கூடுமென்று OTI எதிர்வுகூறுகின்றது.

ஆகக்கூடிய இசைவினை அடைந்துகொள்ளும் பொருட்டு இந்நிலவரங்கள் பயன்விளைவுக் கொத்தணிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வெளிப்படையான காரணங்களிற்காக, நிலவரங்களுக்கிடையில் யாதேனுமொரு பொதுவான கரிசனைப் பரப்பு தவிர்க்கமுடியாததாக உள்ளது. நிலவரங்கள் இனங்காணப்பட்டு,  ஒத்திசைவிற்காக மதிப்பிடப்பட்டதும், பங்குபற்றும் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் மூலம் அவை உடன்பட்டுக்கொள்ளப்படுகின்றன.

குறைவானது, நடுத்தரளவில் பெரும்பாலானது, பெரும்பாலானது மற்றும் மிகப் பெரும்பாலானது ஆகியவற்றிலிருந்தான நான்கினைக் கொண்ட ஓர் அளவுகோலில்ஒவ்வொரு நிலவரமும் உண்மையாக மாறும் அவற்றின் சாத்தியப்பாட்டிற்கு ஏற்பதரப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஒவ்வொரு நிலவரத்தின் கீழும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை மட்டமும் மிகக் குறைவானது, குறைவானது, நடுத்தரளவானது, உயர்வானது என்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவரம் I –புதிதாய் மீண்டெழல் (பீனிக்ஸ்)

சாத்தியப்பாடு:  குறைவானதுநம்பகத்தன்மைநடுத்தரளவானது

சட்டமுறைமை – சனாதிபதியைச் சுற்றிக் குவிந்திருத்தல்: பெரும்பான்மையான சனத்தொகையினரின் நம்பிக்கையினை வென்று இப்பிரச்சினையை முகாமிக்கும் சனாதிபதியை நோக்கி அரசியல் அதிகாரத்தை இவ் வைரஸ் நிகழ்வானது இடம் மாற்றுகின்றது. விடயங்களை கட்டுப்பாட்டின் கீழ் அவர் வைத்திருப்பதனால் வலுவான மற்றும் வெகுசன தலைமைத்துவம் பாராட்டப்படுகின்றது. மக்களின் ஒற்றுமைக்கும் புதியதோரு தேசிய உதயத்திற்கும் கொவிட்-19 உதவுகின்றது.

பொருளாதாரம் –குறைவான எண்ணை விலைகள், போதுமானளவு வெளிநாட்டு உதவி மற்றும் குறைக்கப்பட்ட இறக்குமதிகள்:குறைவான எண்ணை விலைகளும் சீன நிதி உதவியும் குறுங்காலத்திலும் நடுத்தரளவு காலத்திலும் அரசாங்க நிதிகளை கடனின்றி வைத்திருக்கும். உலகளாவிய மந்தநிலை மேற்கத்தைய நாடுகளை மிகப் பாரதூரமாகப் பாதிக்கும் போதிலும் அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்களிலான எதிர்மறை அக்கறைகளானவை இலங்கை உள்ளடங்கலாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு முதலீட்டை முனைப்புடையதாக்குகின்றன. குறைவான எண்ணை விலைகள் காரணமாக குறைவான இறக்குமதிச் செலவுகள் மூலம் ஏற்றுமதி குறைவுகள் ஈடுசெய்யப்படுகின்றன. குறுங்கால முடக்கங்களானவை சில தாபிக்கப்பட்ட வலையமைப்புகளுக்கு இடையூறு விளைவிப்பதுடன் புதிய மற்றும் கூடுதல் வினைத்திறனான உற்பத்தி மற்றும் விநியோக முறைமைகள் தோற்றம்பெறுவதற்கு அனுமதிக்கின்றன. குறைக்கப்பட்ட ஆடம்பர இறக்குமதிகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி புத்துயிரளிப்பு பற்றிய தற்காலிக பொருளாதார அளவீடானது மஹதிரின் மலேசிய மாதிரி அடிப்படையில் இந்நாட்டினை உருவாக்குகின்றது, எனினும், மையப்பகுதியில் இராணுவ ஆதரவுடனான அரச முதலாளித்துவத்தினதும் ‘நிறுவனத்திற்குள்ளேயான அதிகார’ (‘insider’) அந்தஸ்தினை அனுபவிக்கும் சிறிய எண்ணிக்கையிலான மேல்வர்க்க வியாபார அதிகாரவகுப்பினர்களினதும் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பித்துவைக்கின்றது.

அரசியல்சனாதிபதி அரசியல் அனுகூலத்தைப் பெறுவதுடன் பாராளுமன்றத்தினதும் பாராளுமன்றத் தேர்தலினதும் பொருத்தப்பாடு குறைவடைகின்றது:வலுவான இராணுவம் ஒன்றினதும் சாதகமான ஊடக வலையமைப்புகளினதும் ஆதரவுடன் சனாதிபதியின் ஆற்றலினைக் கையாளும் முகாமைத்துவத்திலான நம்பிக்கையானது, பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஒப்பீட்டு ரீதியில் முக்கியமற்றவையாக ஆக்குகின்றது.சனாதிபதியின் கண்ணோட்டத்திற்கு ஆதரவளிக்கும் பௌத்த சமய சமூகத்தின் உதவியுடன், நிகழ்காலப் பாராளுமன்றத்தை மீளக்கூட்டாமல் எந்தளவிற்குச் சாத்தியப்படுகின்றதோ அந்தளவிற்கு பாராளுமன்றத் தேர்தல்கள்நடாத்தப்படமாட்டாது அல்லது பிற்போடப்படும். தேர்தல் நடாத்தப்படும் என்பதுடன்கணிசமான எண்ணிக்கையிலான கட்சி தாவல்களுடன் மூன்றிலிரண்டு (2/3) பெரும்பான்மையை அடைவதற்கான சாத்தியப்பாட்டுடன், தெளிவான பெரும்பான்மையொன்றை ஆளுங்கட்சி பெற்றுக்கொள்கின்றது. அரசியல் உறுதித்தன்மை தொடர்வதுடன் அரசாங்கமானது தொடர்ந்துசெல்வதற்கான சிறந்த வாய்ப்புக்களுடன் வெகுசனத் தொடர்புடையதாகக் காணப்படும். பிரதம அமைச்சரின் வகிபாகமானது சனாதிபதியின் வகிபாகத்தின் மூலம் முக்கியத்துவம் குறைத்துக் காட்டப்படும்.

சவால்கள் –அரசியலமைப்பு நெருக்கடி ஒன்றின் ஆபத்து, சனநாயகத்தை நிலைநிறுத்தல், அதிருப்தியினை முகாமித்தல்.பாராளுமன்றமானது மீளக்கூட்டப்படமாட்டாது என்பதுடன் அரசாங்க செலவினத்திற்கான பாராளுமன்ற அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது, அதன்மூலம் அரசியலமைப்பு மீறப்படும். பாராளுமன்ற அமர்வின்றி மூன்று (03) மாதங்கள் கொண்ட அரசியலமைப்புக் காலவரையறை முடிவடையக்கூடும் என்ற படியால் இலங்கை சனநாயகத்தின் சீர்கேடானது பயன்விளைவொன்றாக அமையலாம். அதிகரித்துவரும் அதிகாரத்துவப் போக்குகளானவை இனத்துவ மற்றும் பொருளாதார அதிருப்தி தோற்றம்பெற வழிவகுக்கலாம். மனித உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் பொருளாதார உரிமைகள் என்பவற்றுக்கு மதிப்பளித்தலானது, அரசாங்கத்தின் கவனம் குறைவாகக் காணப்படக்கூடிய பரப்புகளாக அமையும். ஆக்ரோஷமான பௌத்த துறவிகள் உள்ளடங்கலாக சமய ரீதியில் தூண்டப்பட்ட பெரும்பான்மைச் செயற்பாட்டாளர்களின் அதிகரித்துவரும் அதிகாரமும் கேள்விகளும் குடிசார் (சிவில்) நிர்வாகம் ஒன்றைப் பேணுவதற்கு அதிகரித்துவரும் சவாலொன்றை விளைவிக்கும்.

நிலவரம் II –சாதனையாளரின் பாழ்பட்ட நிலம் (Hero’s Wasteland)

சாத்தியப்பாடுநடுத்தரளவானதுநம்பகத்தன்மைமிகக்குறைவானது

சட்டமுறைமை:அரசாங்கம் சட்டமுறைமையை இழப்பதுடன் எதிர்க்கட்சி பலவீனமாக உள்ளது. ஒப்பீட்டு ரீதியில் வெகுசனம் சாராத ஆட்சியானது ‘சகல அதிகாரமும் பொருந்திய அரசு’ (‘big-brother’) அரசியலை நாடுகின்றது. அரசாங்கத்திலுள்ள உள்ளகப் பிளவுகளானவை அதன் நன்மதிப்பையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கின்றன.அதிகரித்த இராணுவமயமாக்கலானது அரசாங்கத்தின் சர்வதேச நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கின்றது.

பொருளாதாரம்–கொவிட்–19 உலகளாவிய நோய்த்தொற்று காரணமாக உலகப் பொருளாதாரப் பின்னடைவின் தாக்கமானது நாட்டின் தற்போதுள்ள வெளிநாட்டுக் கடன் நெருக்கடியைத் தீவிரமாக்கும் என்பதுடன் ஏற்றுமதி உழைப்புக்களை மேலதிக நெருக்கடி மட்டத்திற்குள் ஏற்கனவே மந்தப்படுத்தியுள்ளது. நீண்டுசெல்வதும் தொடர்ச்சியானதுமான முடக்கமானது பொருளாதாரத்தைச் சுருக்கி ஏற்றுமதி உழைப்புக்கள், ஒதுக்கங்களைக் குறைக்கும். பின்னர் நிகழும் சமூக-பொருளாதார சுருக்கமானது அபிவிருத்தியை தடைப்படுத்தும் என்பதுடன் சமுதாயத்திற்குள் மந்தநிலை, அதிகரித்த சமத்துவமின்மை மற்றும் நம்பிக்கையிழந்த நிலை என்பவற்றுக்கு வழிவகுத்து வாய்ப்புக்களைக் குறைக்கும். சுற்றுலாத்துறை, ஆடை மற்றும் ஏனைய ஏற்றுமதிகள் என்பன உலகளாவிய பின்னடைவால் பாதிக்கப்படுகின்றன. எண்ணை விலை வீழ்ச்சியின் அனுகூலமானதுகவர்ச்சி அலங்கரிப்புகளுக்காக (doll-outs) அதிகரித்த அரசாங்க செலவுகள் மூலமும் அதிகரித்துவரும் ஆட்சிமுறைமை மூலமும் இல்லாமற் போகின்றது.

அரசியல்–ஆரம்பத்தில், வெகுசனம் சார்பான வலுவுள்ள அரசாங்கமொன்றை மக்கள் விரும்புவர். தீர்மானமெடுத்தல் செய்முறைகளில் அரசியலமைப்புசார் பரஸ்பர கட்டுப்பாட்டு, செல்வாக்கு உரிமைகள் (checks and balances)புறக்கணிக்கப்படுவதால் அதிகாரத்துவ ஆட்சியொன்றுக்கு அது இறுதியாக இட்டுச்செல்லும். ஏற்படவிருக்கும் நெருக்கடி காரணமாக பாராளுமன்றத் தேர்தல் தாமதப்படுத்தப்படும் என்பதுடன் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான நிறுவனங்களினால், அதாவது தேர்தல் ஆணைக்குழு / நீதித்துறையினால், மையப்படுத்தப்பட்ட நெருக்கடி செயல்முகங்கொடுப்பின் போது செயல் நடைமுறையை மாற்றுவதற்கு இயலாதிருக்கும்.பொதுத் தேர்தல் பிற்போடப்படுவதுடன் ஆளுநர்களுடனும் இராணுவத்துடனும் நாட்டை நிர்வகிப்பதை சனாதிபதி நாடுகின்றார். செலவினத்திற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் எத்தனிப்பதில்லை, ஆனால் அரசியலமைப்பை தொடர்ந்து புறக்கணிக்கின்றது. அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட நடத்தையினை நியாயப்படுத்தும் பொருட்டு நெருக்கடி சூழ்நிலையில் மக்களின் ஆதரவைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் மகுட வாசகமாக ‘தேவைப்பாட்டுச் சட்டம்’ மாறுகின்றது.பாராளுமன்றத் தேர்தல்கள் கால தாமதத்துடன் நடாத்தப்பட்டதும், பாராளுமன்றத்திற்கும் சனாதிபதி தத்துவங்களிற்கும் / ஒன்றுபட்ட குழுவிற்கும் இடையிலான புதியதொரு நெருக்கடி மட்டத்திற்கு வழிகோலி பெருமளவு பெரும்பான்மையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான அரசாங்கக் கட்சியின் வாய்ப்புக்கள் குறைகின்றன.அதிகாரத்துவத் தலைவர் ஒருவர் தோற்றம்பெறுவதற்கான இசைவாக்கப்பட்ட (tailor-made) அமைப்பொன்றை உருவாக்கி சனநாயக நிறுவனங்கள் தடுமாறுகின்றன, பொருளாதாரம் பின்னடைகின்றது, சமூகக் குழப்பம் உருவாகின்றது. ஒன்றில் வெகுசன (popular) மற்றும் வெகுசனம் சார்பான (populist) சனநாயகம் நோக்கிய தேசியத் தலைவர் தோற்றம்பெறுவதற்கான அல்லது அரசாங்கத்தினால் வழிநடாத்தப்படும் இனத்துவ-சமய தேசியவாத போக்குகளை,பொருளாதாரத்தை மீளவும் வெற்றிப் பாதையில் கொண்டுவருவதற்கான வாக்குறுதிகளுடன் அடுத்த மட்டத்திற்கு கொண்டுசெல்லக்கூடிய வெகுசனம் சார்பான (populist) தலைவர் தோற்றம்பெறுவதற்கான இசைவாக்கப்பட்ட (tailor-made) சூழ்நிலையொன்றாக இது மாறுகின்றது.

சவால்கள் – சனாதிபதியை மையப்படுத்திய நிர்வாகத்தின் அதிகரித்துவரும் அதிகாரத்துவ நோக்கு தொடர்வதால் சிறீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) (சனாதிபதி உள்ளடக்கப்பட்டுள்ளார்) கட்சியுடனான உட்பூசல்கள் வெளிவருகின்றன. பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களும்பசில்ராஜபக்‌ஷ அவர்களும் புதிய உட்தடையொன்றை உருவாக்குகின்றனர். பொருளாதாரம் முன்னேற்றங்காணாத படியால் மக்களின் அதிகரித்துவரும் துயரமானது ஒளிவுமறைவான எதிர்ப்புக்கு வழிவகுத்து அடக்கிவைக்கப்படுகின்றது. நிர்வாகத்தினையும் மாற்றுக்கருத்தை உள்ளடக்குவதற்கான பொதுமக்கள் கலந்துரையாடல் களத்தையும் (public sphere) மேலும் இராணுவமயமாக்கல். இனத்துவ துருவப்படுத்தலானது (polarization) முன்னெப்போதுமில்லாத மட்டமொன்றுக்கு அதிகரிக்கின்றது அத்துடன் முஸ்லீம் சமுதாயத்தினருக்கு எதிரான வன்முறையானது புதிய விதியொன்றாக மாறுவதுடன், அதன்மூலம் பௌத்த-சிங்கள கண்ணோட்டத்தில்  ‘முஸ்லீம்கள்’ பிரதான ‘ஏனையோர்’ ஆக மாறுகின்றனர்.சிறுபான்மைக் கட்சிகளினால், விசேடமாக தமிழ் சிறுபான்மையினரால் அவர்களின் அரசியல் அதிகாரத்தை துருவப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தக்கவைத்துக்கொள்வதற்கு இயலுமாகவிருக்கும். சனாதிபதியின் மேலாதிக்க அதிகாரங்கள் பல்வேறுபட்ட வழிகளில் சவாலுக்கு உட்படுத்தப்படுவதால் அவரின் சொந்த அதிகாரத்தை மென்மேலும் பிரயோகிப்பதை அவர் நாடுவார். உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையையும் செயற்பாட்டாளர்களையும் பலவீனப்படுத்துவதை அரசாங்கம் நாடுவதால் மனித உரிமைகளையும் பொருளாதார உரிமைகளையும் நிலைநாட்டுவது மிகக் கடினமாக மாறுகின்றது.

நிலவரம் III – TISL (இது இலங்கை) / தற்போதைய நிலை (Status Quo)

சாத்தியப்பாடுமிகப்பெரும்பாலானதுநம்பகத்தன்மைகுறைவானது

சட்டமுறைமைகொவிட்- 19 நோய்த்தொற்று நிகழ்வானது அரசாங்கத்தை பிரதிகூலமான நிலைக்கு கொண்டுவருகின்ற படியால் சனாதிபதி அவர்கள் நன்மதிப்பு இழப்பினால் வருந்துகின்றார். பிரதம அமைச்சரின் நன்மதிப்பானது சனாதிபதி அவர்களின் நன்மதிப்புடனான போட்டியில் சீர்கெடுகின்றது. அரசாங்கத்தின் சட்டமுறைமையானது அரசியலமைப்பைப் புறக்கணிப்பதால் சவாலுக்குட்பட்டு, பின்னர் பொருளாதார மற்றும் சனநாயக முன்னணிகள் தொடர்பான எதிர்ப்பினால் பலவீனமடைகின்றது.

பொருளாதாரம் –கொவிட்-19 இற்கு முன்னர் சுனாமி, வடக்கில் ஆயுத மோதல் மற்றும் ஏப்பிறல் 21 தாக்குதல் ஆகிய பல நெருக்கடிகளை இலங்கை கண்டுள்ளதுடன் அவற்றிலிருந்து பிழைத்துள்ளது.இந்நாடு அவற்றை மிக நன்றாக வெற்றிகண்டுள்ளது, ஆனால் விடயங்கள் நிகழப்பெறும் வழியில் உண்மையான திருப்பமொன்றை இயலுமைப்படுத்தி, வாய்ப்புக்களை தேசிய முனைப்பொன்றாக மாற்றுவதற்கான உந்துதலை நிலைத்துநிற்கச் செய்வதற்கு இந்நாட்டினால் ஒருபொழுதும் இயலுமாகவிருந்திருக்க முடியவில்லை. நாளாந்த வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்திற்கு கணிசமானளவு பாதிப்பு உள்ள போதிலும் கொவிட்-19 நெருக்கடியும் வெற்றிகொள்ளப்படும்.நெருக்கடியின் போது மக்கள் ஒன்றிணைவர், ஆனால் அதன் பின்னர் விரைவில் பிரிந்து போவர். பொருளாதாரப் பிரச்சினைகள் மக்களைப் பாதிக்கும் என்பதுடன், பெரும்பாலும் பாதிப்புக்குட்படும் பிரதான துறைகளுக்கு அனைத்திலும் வறியோர் மூலம் ஆளணியிடப்படுவதால் விசேடமாக நாற்கூம்பு கட்டமைப்பின் (பிரமிட்) கீழ்நிலையிலுள்ளவர்களை பாதிக்கும்.ஆடைக் கைத்தொழில், தேயிலைக் கைத்தொழில், சுற்றுலாத்துறை, மத்திய கிழக்கிற்கு குடிபெயர் பணியாளர்கள் ஆகிய இவ்வனைத்து நான்கு துறைகளுக்குமான கேள்வியானது உலகளாவிய பின்னடைவு மற்றும் எண்ணை விலை வீழ்ச்சியில் குறைவடையும் என்பதனால் இத்துறைகள் அனைத்தும் மிகக் கெடுதலான பாதிப்பை பெரும்பாலும் அடைந்துகொள்ளும். அவற்றைப் பராமரிப்பதற்கான அரசாங்கத்தின் ஆற்றலானது, அதன் அரசிறை நிலமை பலவீனமாக மாறுவதனால், மென்மேலும் மிகக்குறைவாக மாறுகின்றது. ஏற்கனவே பார்க்கப்பட்டுள்ளவாறு, திடீரென பணத்தை அச்சிடுதல், எதிர்வுகூறமுடியாத வரி மாற்றங்கள் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் போன்றவற்றின் பண்புகளைக் கொண்டமைந்து, அரசிறை முகாமைத்துவத்தில் தற்காலிக நடைமுறைநோக்கானது (pragmatism) ஆதிக்கம் செலுத்தும். இது பணவீக்கத்திற்கும் வியாபார மற்றும் முதலீட்டாளர் சமுதாயங்களுக்கிடையிலான குறைக்கப்பட்ட நம்பிக்கைக்கும் இட்டுச்செல்லும்.

அரசியல் –புதிய தேசிய குடையொன்றைச் சுற்றி மக்களை ஒன்றுசேர்த்து வைத்திருத்தலானது கடினமாக இருக்கும். சனாதிபதிக்கும் பிரதம அமைச்சருக்கும் இடையிலான கொள்கை இடைவெளியானது, இரு அதிகார மையங்களுக்கு வழிவகுத்து, படிப்படியாக விரிவடைய ஆரம்பிக்கும். அது கொள்கை இசைவினைப் பாதிக்கும் என்பதுடன் சனாதிபதிக்கும் பிரதம அமைச்சருக்கும் இடையிலான போட்டியொன்றாக ஆட்சி மென்மேலும் மாற்றமுறும். பாராளுமன்றத் தேர்தலானது ஜூன் மாத காலப்பகுதியில் நடாத்தப்படமாட்டாது என்பதுடன் அதன்மூலம் சட்ட மற்றும் அரசியலமைப்பு சட்டமுறைமையை இழக்கும். தேர்தல் நடாத்தப்பட்டதும், மஹிந்த ராஜபக்‌ஷவினால் உருவாக்கப்படும் புதிய அரசாங்கமானது இலகுவில் 113 பாராளுமன்ற ஆசனங்களை விஞ்சும், ஆனால் மூன்றிலிரண்டு (2/3) பெரும்பான்மை பற்றிய ஏதேனும் நம்பிக்கைகளைப் பூர்த்திசெய்யத் தவறும். இச்சூழ்நிலையில், அரசியலமைப்பிற்கான மேலதிக மறுசீரமைப்புக்கள் நிகழ்வதற்கான சாத்தியப்பாடு குறைவாக உள்ளதுடன், 19 ஆம் திருத்தம் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக்கள் மீதான விவாதங்கள் முன்னேற்றமின்றி தொடரும். புதிய பிரதம அமைச்சரானவர் (PM) சனாதிபதியிடமிருந்தான பல தடைகளை முழுமையாக அனுபவிக்க வேண்டியிருக்கும். சுருக்கமடையும் ஏற்றுமதிகளும் தடுமாறும் பொருளாதார முகாமைத்துவமும் எதிர்க்கட்சிகளின் அதிகரித்த அதிகாரத்திற்கு வழிவகுத்து குறுங்காலத்தில் சிரமத்தை அதிகரிக்கும். நாளாந்தப் பிரச்சினைகளானவை உண்மையான தீர்வுகளுக்கான வாய்ப்புக்களை பின்னால் விட்டு நீண்டகாலப் பிரச்சினைகளை விரைவில் மறைக்கும். காலம் தொடர்ந்து செல்வதனால் எதிர்க்கட்சி வலுவான பாதுகாப்பான நிலையை அடையக்கூடும்.

சவால்கள் –  சனாதிபதியின் தேர்தல் பரப்புரையின் போது அவருக்கு ஆதரவளித்த தீவிர-தேசிய கூறுகளானவை புதிய ‘எதிரிகளை’ உருவாக்க முயற்சிக்கின்ற படியால் அவற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் தேசியவாத கூறுகளின் அதிகரித்துவரும் அதிகாரமானது உந்துதலை அடையும். சனாதிபதி நியமனங்கள் கூடுதலாக இராணுவத்திலிருந்தாக அமைவதால் அரசாங்கமானது அதன் குடிசார் (சிவில்) நோக்கினைப் பேணுவதற்கு மிகக் கடினமான பணியை ஆற்ற வேண்டியிருக்கும். சனாதிபதி ஒருவர் இராணுவத்தின் ஆதரவுடன் இருத்தலும் பிரதம அமைச்சர் ஒருவர் அத்தடையினை வெற்றிகொள்வதற்கான வழியினைக் கண்டறிய முயற்சித்தலும் தவிர்க்கப்பட வேண்டியுள்ள மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் நிலவரம் ஒன்றாக அமையும்.2015 – 2019 காலப்பகுதியை வலுவாக ஒத்ததாக, சனாதிபதிக்கும், பிரதம அமைச்சருக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் எடுத்துக்காட்டான மூன்று தடை மோதலொன்றை இது ஏற்படுத்தும்.

நிலவரம் IV –‘இரு குழுக்களுக்கிடையிலான பகைமை’ (‘Us vs Them’)

சாத்தியப்பாடுநடுத்தரளவில்பெரும்பாலானதுநம்பகத்தன்மைநடுத்தரளவானது

சட்டமுறைமை–அரசாங்கமானது கொவிட்-19 நோய்த்தொற்று நிகழ்வைக் கட்டுப்படுத்துவதில் தடுமாற்றம் அடைவதுடன் வேண்டுமென்றே வைரஸைப் பரப்புவதாகவும் பொருளாதார அளவின் (economic pie) நியாயமற்ற பங்கொன்றை ‘அனுபவிப்பதாகவும்’ முஸ்லீம்கள் குறைகூறப்படுவர். அரசாங்கத்தின் சர்வதேச நன்மதிப்பு குறைவடைவதனால் சிங்கள இனத்திற்கான அறப்போர்வீரராக (crusader) சனாதிபதி மாற்றமடைகின்றார்.

பொருளாதாரம் – ‘முடக்க’ காலப்பகுதி நிறைவுறும் போதிலும், பொருளாதாரச் செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்து வாழ்க்கை கடினமாக மாறுவதால் அத்துடன் வியாபாரங்கள் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு காலம் எடுப்பதால், பொருளாதாரச் சுமையானது மிகவும் நலிவுற்றோரினாலும் ஒப்பீட்டு ரீதியில் வறியோரினாலும் உணரப்படும். ஏற்றுமதிகள் குறைவடைந்து வேலைகள் இழக்கப்படுகின்றன. அரசாங்கமானது கொவிட்-19 நோய்த்தொற்று நிகழ்வின் போது அதன் மையப்படுத்தப்பட்ட வழங்கல் வரிசைத்தொடர் முகாமைத்துவத்துடன் மென்மேலும் அரசினால் நிர்வகிக்கப்படும் அல்லது தலையீடு செய்யப்படும் பொருளாதார முறைமையொன்றை பயன்படுத்திக் கொண்டுள்ளதுடன் விசேடமாக வறியோருக்காக விலைகளைக் குறைவாகப் பேணுவதற்கான முயற்சியில் கருத்திற்கொள்ளத்தக்க காலப்பகுதியொன்றுக்கு இதனைத் தொடர்வதற்கு விரும்புகின்றது. குறுங்காலத்தில் அரசாங்க நிதிகள் எளிதாக காணப்படும் சாத்தியப்பாடு குறைவாக உள்ளபடியால் இனத்துவ-சமய துருவப்படுத்தலின் அதிகரிப்புடன், அதிகாரத்துவத் தலைவர் ஒருவர் தோற்றம்பெறுகின்றார். வியாபாரங்களின் அரச கட்டுப்பாடு மற்றும் வழங்கல் வரிசைத்தொடர்கள் என்பன இரு வாக்குவாதங்களில் நியாயப்படுத்தப்படுகின்றது – முதலாவது, அரசாங்கம் (இராணுவம்) இதனை மலிவாகவும் சிறப்பாகவும் செய்கின்றது, அத்துடன் இரண்டாவது, இது உண்மையில் முஸ்லிம் கட்டுப்பாட்டிலிருக்கின்றது, அவ்வியாபாரங்கள் மீட்கப்படுகின்றன.

அரசியல் –அதிகாரத்துவத் தலைமைத்துவ மாதிரியானது குறுங்காலத்தில் மீண்டும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றும். சமயச் சார்பற்ற சனநாயக நிறுவனங்கள் நீண்டகாலச் செய்முறையில்  பலவீனப்படுத்தப்படலாம். தேர்தல் பிற்போடப்படும் என்பதுடன் பொது நிதிக்கான பாராளுமன்ற அங்கீகாரமின்றி அரசாங்கம் தொடர்ந்து செல்லும். எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தகைய அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட நடத்தையானது, அப்பிரச்சினைகள் தொடர்பில் கிறிஸ்தவ தலைவர்கள் அமைதியாகத் தொடர்ந்திருப்பதால், உயர் மதிப்பிற்குரிய பௌத்த துறவிகள் உள்ளடங்கலாக பெரும்பான்மையான சமயம்சார் ஒன்றுபட்ட குழுக்களினால் நியாயப்படுத்தப்படும். அரசியலமைப்பிற்கான 19 ஆம் திருத்தமும் நல்லிணக்க செய்முறையும் சிங்கள ஆட்சியமைப்பு முறைக்குள் பொருத்தமற்ற பிரச்சினைகளாக மாறுகின்றன. இருந்தபோதிலும், வெவ்வேறுபட்ட பொருளாதார வகுப்பினர்களுக்கிடையில் நிதி மற்றும் அபிவிருத்தி பாகுபாடுகள் மீது அதிருப்தி தோற்றம்பெறும் என்பதுடன் இனத்துவ-சமய பதற்றநிலைகளினால் முக்கியத்துவம் குறைத்துக் காட்டப்படும். தேசியவாத கூறுகளானவைதன்முனைப்பு ஆட்சியொன்றுக்கு (one-man rule) ஆதரவளித்து; ஆட்சியாளர்களிடமிருந்து அனுசரணையைப் பெற்றுக்கொள்ளும். பொருளாதாரப் பின்னடைவில் வகையற்றுப் போகின்ற தொழிற்சாலைகளை இராணுவத்தினால் ஆதரவளிக்கப்படும் குழுக்கள் நடாத்தும் என்பதனால் பொருளாதார முகாமைத்துவமானது விரைவில் ஒருசில சிறப்புரிமையளிக்கப்பட்ட மக்கள் தொகுதியினரால் பொறுப்பேற்கப்படும். பின்-கொவிட் சூழ்நிலையில், அரசியலை வடிவமைக்கும் தேசிய தன்னிறைவுசார் உணர்ச்சியைத் தூண்டும் பேச்சு, மேற்கத்தய நாடுகளுக்கு எதிரான மனோநிலைகள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வுகள் என்பவற்றில் ஓர் எழுச்சி காணப்படும்.

சவால்கள்–இனத்துவ-சமய பிளவுக் கருத்துக்களின் (fault lines) அடிப்படையில் அதிகரித்த துருவப்படுத்தலுக்கு வழிகோலி தேசிய ஒற்றுமையை இனத்துவ-சமயக் கூறுகள் பாதிக்கும். நாட்டின் குடிசார் (சிவில்) நன்மதிப்பு பாதிக்கப்படும் சூழ்நிலையொன்றில், சீனாவை விட உலகப் பொருளாதாரப் பின்னடைவிலிருந்து பழைய நிலைக்குத் திரும்பும் செய்முறையில் இந்தியா உட்பட வேறு எந்தவொரு நாடும் உள்ளபடியால் அவற்றின் சொந்தப் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இலங்கைக்கு உதவும் நிலையில் அவை காணப்படாதிருக்கலாம். சீனாவின் சர்வதேச கூட்டணியில் பதிலி நாடொன்றாக (proxy state) அதன் வலுவான கட்டுப்பாட்டிற்குள் இலங்கையைக் கொண்டுவருவதற்கு சீனாவிற்கு இது பெரும் வாய்ப்பொன்றாக அமையும்.சிலவேளைகளில் தேசியவாதி மற்றும் கட்சி சார்பாளன் என்பவற்றுக்குச் சமமான கூறுகளுடன், எதிர்க்கட்சி அரசியலினால் தீவிரமாகப் பரம்பிய வடிவமொன்றை எடுக்க முடியும்.

Leave a Reply