You are currently viewing பொறுப்புகூறல் எப்போது நிறைவேற்றப்படும்?

பொறுப்புகூறல் எப்போது நிறைவேற்றப்படும்?

போரில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை நினைவு கூர்வதற்குக் கூட தமிழர்களை அனுமதிக்காமல் அட்டூழியம் பண்ணும் கொழும்பு ஆட்சிப் பீடத்தின் கொடூரப் போக்கு மீண்டும் கண்டனத்திற்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் போரின்போது தமது படைகள் செய்த அட்டூழியங்களை மறுத்துள்ள நிலையில், அது உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகங்களையும் மௌன மாக்க முயற்சிக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் எலைன் பியர்சன் கூறியுள்ளார்.

உள்நாட்டுப் போரில் இறந்த அல்லது காணாமலாக்கப்பட்டவர்களை நினைவு கூரும் தமிழர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தித் தடுத்துள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஷ்பிரயோகங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் சர்வதேச நடவடிக்கைகள் தேவை என்பதையே இந்த சம்பவங்கள் தெளிவாக்குகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முதல் நாள் – கடந்த மே மாதம் 17ஆம் திகதி – ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், வலிந்து காணாமலாக்கப்பட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச வழக்குகள் மற்றும் பிற பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் அறிக்கையை வெளி யிட்டிருந்தது. இந்நிலையிலேயே மனித உரிமைகள் கண் காணிப்பகத்தின் அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது.

இதேசமயம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வேளையில் இலங்கையில் தங்கியிருந்து, நேரடியாக முள்ளிவாய்க்காலுக்குச் சென்று மக்களுடன் மக்களாகத் தாமும் அந்த நினை வேந்தல்களில் பங்குபற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்நாயகம் அக்னேஸ் கால்மார்ட் அம்மையார், நினைவேந்தலில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் படு வேளை வந்துள்ளது கொலை செய்யப்பட்டோர் தொடர்பாக நீதி, நியாயமான விசாரணைகள் நடை பெறாமை, பொறுப்புக் கூறல் நிலை நாட்டப்படாமை, குற்றமிழைத்தோ ருக்குத் தண்டனை விலகளித்தல் தொட ருகின்றமை குறித்தெல்லாம் காட்டமாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.

அந்தப் பின்புலத்திலேயே மனித உரி மைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப் பாளரின் அறிக்கை இப்போது மீண்டும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் போக்கைக் கண்டிக்கும் விதத்தில் வந் துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கை மற்றும் நேபாளத்துக் கான இணைப்பாளர் தோமஸ் பெல் தற்போது இலங்கையில் தங்கி உள்ளார்.

அவர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான விடயங்களை அவதானித் துள்ளமையுடன் அது சம்பந்தமாக உரிய தரப்புகளுடன் கலந்துரையாடல்க ளிலும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தின் ஆணையை புதுப்பிப்பதும், இலங்கையில் மனித உரிமை மீறல் ளுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு சேகரிக்கப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்துவதும் மிக வும் முக்கியமானவை என்று மனித உரி மைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பியர்சன் தமது நேற்றைய அறிக்கையில் குறிப்பிட்டுள் ளமை கவனிப்புக்குரியதாகின்றது.

இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது யுத்த குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவை மோசமாக இடம்பெற்றுள்ளன, அவை தொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்து, நீதியையும் பொறுப்புக் கூறலையும் நிலைநாட்ட சர்வதேச நியமங்களுக்கு அமைவான – பக் கச் சார்பற்ற – விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத் தும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் இதுவரை தான் இவ்விடயம் தொடர்பில் சேகரித்த ஆதாரங்களை உரிய முறையில் பயன்படுத்த வேண்டிய வேளை வந்து விட்டது.