You are currently viewing பொதுமன்னிப்பு ‘அரசியல் ஆயுதமாகக்கூடாது’

பொதுமன்னிப்பு ‘அரசியல் ஆயுதமாகக்கூடாது’

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பொது மன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரிய , ராமன்ஞ நிகாயா, அமரபுர மகா சங்க சபை பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு கூரகல ரஜமஹா விகாரை தொடர்பான ஊடக விவாதத்தின்போது இன முரண்பாட்டை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு மேல் நீதி மன்றம் நான்கு வருட சிறைத்தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் அவருக்கு மேல் நீதிமன்றம் பிணை வழங்க வில்லை.அதனால் மேன்முறையீடு நிலுவையில் இருக்கும் போதும் அவர் சிறையில் இருக்கின்றார்.

இப்படிச் சிறையில் இருக்கின்றமையும் பொது மன்னிப்பில் வெளியில் வருகின்றமையும் அவருக்கு புதியனவல்ல. நாட்டின் பேரினவாதத்தின் பெயரால் குழப்பங்கள் செய்து, அட்டகாசம் பண்ணுவதில் அவருக் குத்தான் முதலிடம் என்ற ஒரு நிலைமை நீண்ட காலம் இருந்தது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவத்தை ஒட்டிய ஒரு வழக்கு விசாரணைக்கு இடையில் பிரகீத் எக்னலிகொடவின் துணைவி யார் சந்தியா எக்னலிகொடவை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து அச்சுறுத்தியமை உட்பட நீதிமன்ற அவமதிப்பு குற்றங்களுக்காக அவருக்கு சிறைத் தண்டனை முன்னர் வழங்கப்பட்டிருந்தது.

2019 முற்பகுதியில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவருக்குப் பொது மன்னிப்பு அளித்து, அவரை விடுதலை செய்தார். அவர் வெளியில் விடுதலையாகி வெளியே வந்த போது அது குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியாக இருந்த சுமந்திரன் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.

“கடிநாய் ஒன்று கூண்டிலிருந்து கட்ட விழ்த்து சமூகத்துக்குள் விடப்பட்டிருக்கின்றது. சமூகம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது’’ – என்ற சாரப்பட சுமந்திரன் கூறியிருந்தார்.

ஞானசாரருக்கு மன்னிப்பா? இப்போது அவர் நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை பெற்றுச் சிறைக் குப் போயிருக்கும் சம்பவம் அதற்கு முந் திய விடயம். 2016 ஆம் ஆண்டு அவர் நடந்து கொண்ட செயற்பாட்டுக் கான தண்டனையே இப்போது அவர் அனுபவிப்பது. ஆயினும், இப்படி அடாவடித்தன மாக – அட்டகாசமாக – பௌத்த, சிங்கள இனவெறிப் போக்கோடு வன்முறையா கவும் வன்மமாகவும் நடந்து கொள்வது அவரது பரவணிப் போக்கு.

2014 இல் கொழும்பு நிப்பன் ஹோட்டலில் சமய சமரசம் பேணிய ஒரு பௌத்த தரப்பின் செய்தியாளர் மாநாடு நடந்து கொண்டிருக்கையில், அதற்குள் அத் துமீறிப் புகுந்து – அடாவடித்தனமாக நுழைந்து – அட்டகாசம் பண்ணி, அந்தச் செய்தியாளர் மாநாட்டையே குழப் பியவர் ஞானசாரர். அது தொடர்பான வழக்கில் குற்றம் ஐயத்துக்கிடமின்றி நிரூபணமாக இருந்த சமயத்தில், குற்றத்தை ஒப்புக்கொண்டு மூன்று லட்சம் ரூபா நஷ்ட செலுத்தி நிலைமையை சமாளித்தார்.

எனினும் இது அவருக்குக் கடைசி வாய்ப்புத்தான் என நீதிவான் அப்போதே எச்சரிக்கத் தவறவில்லை. ஆனால் அவர் திருந்தவில்லை. 2019 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் பொது மன்னிப்பில் வெளியே வந்த பின்னர்தான், வன்னியில் நீராவியடிப் பிள்ளையார் கோவிலின் சுற்றாடலில், நீதிமன்ற உத்தரவையும் மீறும் விதத்தில் சக பிக்கு ஒருவரின் பூதவுடலைத் தாமே முன்னின்று எரித்தார் அவர்.

அவரது இனவெறித் தன்மையுள்ள மோசமான நடத்தை காரணமாக அவருக்கு முன்னர் வழங்கப்பட்ட அமெரிக்க விசாவை 2014 இல் அமெரிக்கா ரத்து செய்தது. முகநூல் புத்தகத்திலிருந்து அவரது கணக்கை முகநூல் நிறுவனம் முடக்கியது.

கோட்டாவின் ஆட்சிக் காலத்தில் ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செய லணியின் தலைவராக இருந்து கொண்டு, அவர் காய் நகர்த்திய அரசியலின் போக் கும் பலருக்கும் தெரிந்ததுதான். அவருக்குத்தான் மீண்டும் பொது மன்னிப்பு அளித்து அவரை விடுவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதி இருக்கின் றனர் நான்கு மகா சங்க சபைகளின் பீடா திபதிகளும்.