You are currently viewing 13ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும்

13ஆவது திருத்தச்சட்டமும் அதிகாரப்பகிர்வும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணிரூபவ் பொலிஸ் அதிகாரங்களற்ற 13ஆவது
திருத்தச்சட்டத்தினை பாராளுமன்றத்தின் ஊடாக சில திருத்தங்களுடன் மீண்டும்
நடைமுறைப்படுத்தி அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்த தயாராகி வருகின்றார்.


இதற்காக இரண்டு சர்வகட்சி மாநாடுகளை நடத்தியுள்ள அவர்ரூபவ் பாராளுமன்றத்தினைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள்ரூபவ் கூட்டமைப்புக்களிடமிருந்து
தனித்தனியாக யோசனைகளையும் கோரியுள்ளார்.
மீண்டுமொருதடவை ஜனாதிபதி பதவியை வகிப்பதற்காக தேர்தலில் களமிறங்கும்
தீர்மானத்தில் உள்ள ரணில் விக்கிரமசி;ங்கரூபவ் தென்னிலங்கைக்கு ஒவ்வாதிருக்கின்ற
விடயப்பொருள்களான 13ஆவது திருத்தச்சட்டம்ரூபவ் அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்கள்
தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுவரா என்பது தொடர்பில் சந்தேகங்கள்
நீடிக்கின்றன.
குறிப்பாகரூபவ் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதில் சிறுபான்மை தேசிய இனங்களை
விடவும் பெரும்பான்மை சிங்கள வாக்குகள் செல்வாக்குச் செலுத்துவதனால் ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்கவுக்குரூபவ் கடந்த காலத்தில் ஏழு ஜனாதிபதிகள்
நடைமுறைப்படுத்துவதற்கு அச்சப்பட்ட மேற்படி உணர்வுபூர்வமான விடயங்களை
அமுலாக்கும் ‘அரசியல் இயலுமை’ காணப்படுகின்றதா என்பதும்
முக்கியமானதாகின்றது.
அதேநேரம் இறுதியாகரூபவ் ஆகஸ்ட் 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் அதிகாரப்பகிர்வுரூபவ் 13ஆவது
திருத்தச்சட்டம் சம்பந்தமாக தனது முன்மொழிவுகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள்
தொடர்பில் குறிப்பிட்ட விடயங்கள் முக்கியமானவையாகின்றன
அதனடிப்படையில்ரூபவ் ’13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பில்
பல சிக்கல்கள் உள்ளன. அத்துடன் மாகாண சபைகள் தொடர்பிலும் பல பிரச்சினைகள்
உள்ளன. நாம் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால்ரூபவ் இந்தப்
பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். எமது நாட்டின் அபிவிருத்திக்கும்
எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்’
‘பிராந்தியத்தில்ரூபவ் இந்தியா மற்றும் சீனா போன்று மேற்கு நாடுகளான
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய பெரிய நாடுகளும் அதிகாரத்தை
பரவலாக்கியுள்ளன. மேலும்ரூபவ் பிரித்தானியாரூபவ் நெதர்லாந்துரூபவ் ஜப்பான் போன்ற
நாடுகளும் அதிகாரத்தை பரவலாக்கியுள்ளன. சீனாவிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்
காட்டுகிறேன். சீனாவின் சிறுபான்மையினர் மொத்த மக்கள் தொகையில் 9
சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். ஆனால் அவர்கள் இந்த

சிறுபான்மையினருக்கு வலயங்கள்ரூபவ்கோரளைகள் மற்றும் மாநகரங்கள் போன்ற பல
நிர்வாகக் கட்டமைப்புகளில் தன்னாட்சி அதிகாரங்களை வழங்கியுள்ளனர்’
‘இனப்பிரச்சினைக்கான தீர்வாகவோ அல்லது அதிகாரப் பரவலாக்கல் அலகாகவோ
மாகாண சபைகளை ஏற்காத மக்கள் விடுதலை முன்னணியும் ஜாதிக்க ஹெல உறுமயவும் கூட
மாகாண சபை முறைமையில் திருத்தப்பட வேண்டிய விடயங்களும் திருத்தப்படக்கூடாத
விடயங்களும் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளன. ஆகவே மாகாண சபையானது இலங்கையின்
ஆட்சி முறையில் இருந்தும் அரசியலில் இருந்தும் அகற்ற முடியாத ஒரு நிலையான
காரணியாக மாறியுள்ளது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது’
‘அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட முடிந்தால்ரூபவ் தேசிய அடையாளத்தைப்
பாதுகாத்து ஒரே தேசமாக எழுச்சி பெறவும்ரூபவ் நாட்டின் அதிகாரத்தை மக்களிடம்
நெருங்கிச் செல்லும் வகையில் பரவலாக்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். மாகாண சபை
முறைமைரூபவ் வடக்குரூபவ் கிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி ஒன்பது மாகாணங்களிலும்
நிறுவப்பட்டன. மாகாண சபைகளை சரியான பாதையில் வழிநடத்துவதன் மூலம் தேசிய
ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுகிறது. மறுபுறம்ரூபவ் இது மிகவும் திறமையான மற்றும்
அதிக சேவை வழங்கும் நிறுவன கட்டமைப்பாக உறுதிப்படுத்த முடியும்’
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கள் யதார்த்தமானவையாக
இருந்தாலும்ரூபவ் பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்துக்
கட்சிகளின் அங்கீகாரத்துடன் தான் அடுத்தகட்டம் நோக்கிச் செல்ல முடியும் என்பது
அவரது உறுதியான நிலைப்பாடாக இருக்கின்றது.
அத்துடன்ரூபவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளில் போட்டியிடுவதையும்ரூபவ்
பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அடியொற்றியும் மாவட்ட விகிதாசார
முறையின் கீழ் தேர்தல் நடத்துதல்ரூபவ் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும்
சந்தர்ப்பத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்குதல்ரூபவ் பெண்களின்
பிரதிநிதித்துவத்தை 25சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துதல் ஆகிய
மூன்று முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.
தற்போதைய சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று
அதிகாரத்தினைக் கொண்டிருந்தாலும்ரூபவ் பாராளுமன்றத்தில் அவர் சார்பான ஐக்கிய
தேசியக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு ஆசனமே உள்ளது.
அந்த ஒரு ஆசனத்தினை பயன்படுத்தி தீர்க்கமான முடிவுகளை அவரால் தீர்க்கமான
முடிவுகளை எட்ட முடியாது.
அதேநேரம்ரூபவ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைரூபவ் அதிகாரத்தில் அமர்த்தியுள்ள
பொதுஜனபெரமுன 148பிரதிநிதிகளை கொண்டிருக்கின்ற நிலையில்ரூபவ் 13ஆவது
திருத்தச்சட்டம்ரூபவ் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக மாறுபட்ட நிலைப்பாட்டைக்
கொண்டிருக்கின்றது. அத்துடன்ரூபவ் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் குறித்த விடயங்கள்

சம்பந்தமான முன்னெடுப்புக்களுக்கு ‘மக்கள் ஆணை’ இல்லையென்றும் தர்க்கத்தை
முன்வைக்கின்றது
இந்தநிலையில்ரூபவ் காணிரூபவ் பொலிஸ் அதிகாரம் அற்ற 13ஆவது திருத்தச்சட்டம்
சம்பந்தமாக பாராளுமன்றத்தின் ஊடாக திருத்தங்கள் செய்யப்படுவதும் அவருடைய
முன்மொழிவுகளான தேர்தல் திருத்தம்ரூபவ் பெண் பிரதிநிதித்துவ அதிகரிப்பு
போன்ற பிரதான விடயங்கள் சாத்தியமாகுமா என்பதும்
பெரும்கேள்வியாகின்றது.
அதுமட்டுமன்றிரூபவ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எள்ளளவும்
விருப்பின்றி இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கம்
அரசியலமைப்பில் ஏலவே உள்ள 13ஆவது திருத்தத்தில் திருத்தங்களை
மேற்கொண்டாலும் மக்கள் பிரதிநிதித்துவத்துக்கு வாய்ப்பளிக்காத மாகாண
நிருவாகமே நீடிக்கப்போகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆளுநரை மையப்படுத்திய ‘மாகாண ஆலோசனை
சபை’ என்ற முன்மொழிவு பற்றி சீர்தூக்கிப் பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் குறித்த கட்டமைப்பை உருவாக்குவதற்கும் பாராளுமன்ற அனுமதி
அவசியமாகின்றது.
பாராளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற பொதுஜனபெரமுனவும்ரூபவ் அவர்
தெரிவில் பதவியில் உள்ள ஜனாதிபதியும் மாகாண சபை முறைமையை வெளியுலகிற்கு
தக்கவைப்பதற்காக காண்பிப்பதற்காக மேற்படி முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு
அதியுச்சமாகச் செல்வதற்கே சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளன.
இதேவேளைரூபவ் நீண்டகாலமாகரூபவ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை
கோரிநிற்கின்ற தமிழ்த் தேசியக் கட்சிகள் 1956 முதல் ஒவ்வொரு தேர்தலிலும்
வெளிப்படுத்தப்படும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இணங்கரூபவ் சமஷ்டி கட்டமைப்புடன்
அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள வேண்டும் என்பதையே நிலைப்பாடாக
கொண்டுள்ளன.
குறிப்பாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஆறிலந்து பாராளுமன்ற
பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட நாட்டில் நடைமுறையில் உள்ள
அரசியலமைப்பின் ஒரு பகுதியே ஆகும். தவிரரூபவ் அதுவொரு தனி இணைப்பு அல்ல.
அதனடிப்படையில்ரூபவ் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்
அதை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சத்தியபிரமாணம் செய்துள்ளனர்.
அவ்வாறு அரசியலமைப்பின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்தாதது விடுவது என்பது
அரசியலமைப்பு முழுவதையும் மீறுவதாகவே அமையும். எனவே அரசியலமைப்பில்
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டை முழுமையாக
அமுல்படுத்துமாறே அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளன.

எனினும் 13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை
பூர்த்தி செய்யாது. அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டை பல்வேறு செயல்முறைகள்
மூலம் அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்பதுரூபவ் மங்கள முனசிங்க தெரிவுக்குழுவில்
இருந்து 2016 – 2019 வரை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
கீழ் இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவை வரைரூபவ் மற்றும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின் பதவிக்காலத்தின் போது இந்தியாவுடன் குறைந்தபட்சம் மூன்று
தனித்தனி கூட்டு அறிக்கைகள் மூலம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும்
அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில் நாட்டில் அதிகாரப்பகிர்வின் முதற்படியாகவுள்ள 13ஆவது
திருத்தச்சட்டத்தினை; முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஆட்சியாளர்கள் விரும்பாத
நிலையும்ரூபவ் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் கூட அபிலாஷைகளை பூர்த்தி
செய்யும் நியாயமான தீர்வாக ஏற்றுக்கொள்வதற்கான மனோநிலை தமிழ்
மக்களின் ஆணைபெற்றவர்களிடத்திலும் காணப்படாத நிலைமையே உள்ளது.
இவ்வாறு இருவேறு நிலைப்பாடுகளால் 13ஆவது திருத்தச்சட்டம்
ஊசலாடிக்கொண்டிருக்கையில்ரூபவ் தற்போது அதனை முழுமையாக நீக்க வேண்டுமென்ற
கோசங்களும் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றன. இந்த நிலைமையானது மீண்டும்
அதிகாரப்பகிர்வு சம்பந்தமான உரையாடல் குறித்து துருவப்படுத்தலை
தீவிரப்படுத்தியுள்ளது.