You are currently viewing உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும்பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பும்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும்பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பும்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு
அனுமதி கோரி சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை கடந்த ஏப்ரல் நான்காம்
திகதி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனையடுத்துரூபவ் வரைவு தயாரிப்ர் பணிகள் முன்னெடுக்கப்பட்டுரூபவ் அரசியல்ரூபவ் சிவில்
பிரதிநிகளுடன் பகிரப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின்
இராஜதந்திரிகளுடனும் அதுபற்றிய பகிர்வும் கலந்துரையாடலும் நிறைவுக்கு
வந்துள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் 24 தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ரணில்
விக்கிரமிசிங்க வழங்கிய செவ்வியில்ரூபவ் ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்துக்கு
குறித்த ஆணைக்குழுவுக்கான சட்டமூலம் கொண்டு வரப்பட்டுரூபவ் நிறைவேற்றப்படும்
என்றும் டிசம்பரில் அதன் செயற்பாட்டை காண முடியும் என்றும்
கூறியிருக்கின்றார்.
இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை
ஸ்தாபிக்கும் முயற்சிக்கு தென்ஆபிரிக்கா நல்லிணக்க ஆணைக்குழு தொழில்நுட்ப
ஆலோசனைகளை வழங்குகிறது. சுவிட்ஸர்லாந்து சட்ட உருவாக்கம் சார்ந்த விடயங்களில்
ஒத்துழைக்கிறது. ஜப்பான் ஆணைக்குழுவுக்கான நிதியுதவிகளை வழங்க
இணங்கியிருக்கிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சர்வதேச பொறிமுறையொன்றை
தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் இலங்கை அரசாங்கம மேற்படி சர்வதேச
நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்களைத்; தான் ‘சர்வதேச ஒத்துழைப்புடனான
நல்லிணக்க பொறிமுறையாக’ காண்பிக்க முற்படுகிறது.
இலங்கை அரசாங்கமானதுரூபவ் அரசியலமைப்பு வரையறைக்குள் நல்லிணக்கத்தையும்
பொறுப்புக்கூறலையும் நோக்கிய நீண்டகால அடிப்படையிலான நடவடிக்கைகள் மீது
தொடர்ந்து கவனத்தை செலுத்துவதே தனது நிலைப்பாடாக இருந்துவருவதாக
வெளிப்படுத்துகின்றது.

இருந்தபோதும் அதனை நடைமுறையில் முன்னெடுப்பதற்கு தேசிய இறைமையை
பாதிக்கக்கூடிய சர்வதேச பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காரணம்
கூறி தொடர்ச்சியாக பகிரங்கமாகவே நிராகரிக்கின்றது அல்லது
காலதாமதப்படுத்தி வருகின்றது.
இருப்பினும் 2009ஆம் ஆண்டு உள்நாட்டு போர் நிறைவுக்கு வந்தது முதல் இலங்கை
அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
‘இலங்கையில் நல்லிணக்கம்ரூபவ் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை
ஊக்குவித்தல்’ என்பதை மையப்படுத்தி தொடர்ச்சியாக தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இதில்ரூபவ் 2015ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால- பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மாத்திரமே அதேயாண்டு செப்டெம்பர்
மாதம் 14ஆம் திகதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின்
30ஆவது அமர்வின்
பொது விவாதத்தில்ரூபவ் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பை வழங்குவதாக
பகிரங்கமாக அறிவித்தது.
அதனடிப்படையில் இலங்கையின் அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள
சமரவீர நிலைமாறுகால நீதிக்கான
பொறியமைப்புக்களை அறிமுகம் செய்யும் உரையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை
அரங்கில் ஆற்றினார்.
அந்த உரையின்போதுரூபவ் ரூசூ39;நல்லிணக்க நடைமுறையானது உண்மையைத் தேடுதல்ரூபவ் நீதிரூபவ்
இழப்பீடுகள்ரூபவ் மீண்டும் அநீதி நிகழாமல் பார்த்துக் கொள்ளுதல் ஆகிய பரந்த
துறைகளுக்குக் கவனம் செலுத்துவதைச் சம்பந்தப்படுத்துகின்றதுடன் இவை மீண்டும் நிகழாமல்
பார்த்துக் கொள்ளுதல் உண்மையில் அர்த்தமுடையதாகவிருக்க வேண்டுமேயானால் தமிழ்
மக்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்கின்ற அரசியல் தீர்வொன்றை அடைய
வேண்டிய தேவை உள்ளது என்பதை இலங்கை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்
கொள்ளுகின்றதுரூஙரழவ் எனத் தெரிவித்தார்.
அத்துடன்ரூபவ் மேற்படி செயற்பாட்டிற்காக ‘உண்மைரூபவ் நீதிரூபவ் நல்லிணக்கம் மற்றும்
மீண்டும் நிகழாமைக்கான ஆணைக்குழு’ அமைக்கப்படும் என்றும் அதனை அமைப்பதற்கு
தென்னாபிரிக்கா இலங்கைக்கு ஆலோசனை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
அதன்பின்னரான சூழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு
அமைவாக காலஞ்சென்ற சேர் டெஸ்மண்ட் டி சில்வா அத்தகைய ஆணைக்குழு தொடர்பில்

அறிக்கையொன்றை தயாரித்தார். அதனடிப்படையில் சட்டமூலம் ஒன்று
தயாரிக்கப்பட்டு 2018 செப்டெம்பர் 16இல் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்தோடு ஆணைக்குழுவை அமைப்பதற்கான அடிப்படைப் பணிகள் ஏற்கெனவே
முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்ரூபவ் பிரதமர் பதவியில் இருந்து ரணில்
விக்கிரமசிங்க பதவி நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக்‌ஷவை அன்றைய ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்து அரசியலமைப்பு
சதிமுயற்சியொன்றை முன்னெடுத்த காரணத்தினால் அப்பணிகள் தொடரப்படவில்லை.
அதேநேரம்ரூபவ் குறித்த ஆணைக்குழுவை அமைப்பதாக வாக்குறுதி அளித்த மைத்திரிபால
சிறிசேனவும் அதனை முன்னெடுத்திருக்கவில்லை.
அதன்பின்னர் தனிச்சிங்களரூபவ் பௌத்த மக்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வருகை
தந்திருந்த ராஜபக்ஷக்கள் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் மிகக் காட்டமான
எதிர்நிலைப்பாட்டினையே முன்னெடுத்தனர். அரகலய போராட்டத்தினால் அவர்கள்
ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும்
அவர்களிடமிருந்து ஆட்சிப்பொறுப்பினைப பெற்றுக்கொண்ட தனிநபரான
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது ராஜபக்ஷக்களின் போக்கிலேயே
செல்கின்றார்.
எனினும் அவர்ரூபவ் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தனது கரிசனையை
வெளிப்படுத்தி வருகின்றார். ஆனால் கள யதார்த்தத்தில் நிலைமைகள் மாறுபட்டவையாக
உள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் நினைவுகூரல்களைச் செய்தல் மற்றும் நினைவுச்சின்னங்களை
பேணிப்பாதுகாத்தல்ரூபவ் பொது மன்னிப்புகள்ரூபவ் உண்மை-நாடல்ரூபவ் குற்றங்களை
புரிந்தவர்கள் மீது நீதிசார் மற்றும்
நிர்வாகத் தடைகள்ரூபவ் உண்மைகளை சரிபார்த்தல் மற்றும் காணாமல்
போனோரைத் தேடுதல் போன்ற விடயங்களுக்கு இதயசுத்தியான அனுமதிகளோரூபவ்
செயற்பாடுகளோ இல்லாத நிலைமைகளே காணப்படுகின்றன.
உதாரணமாக கூறுவதாயின்ரூபவ் கறுப்பு ஜுலைக் கலவலரம் நிகழ்ந்து நான்கு தசாப்தங்கள்
கடந்துள்ள போதும் அதன் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் ஏற்றுபாடு
செய்யப்பட்டிருந்தபோது அங்கு வருகை தந்திருந்த குழுவொன்று நினைவேந்தலைத்
திட்டமிட்டு தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தது. அதன்போதுரூபவ்
பாதுகாப்பு தரப்பினரோரூபவ் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினரோ
தலையீடுகளைச் செய்திருக்கவில்லை.

இவ்விதமான மனோநிலைமைகள் இன்னமும் நீடிக்கின்ற நிலையில் உண்மை மற்றும்
நல்லிணக்க ஆணைக்குழுவானதுரூபவ் எவ்விதமாக செயற்படப் போகின்றது என்பதில்
கேள்விகள் இருக்கின்றன.
அதாவதுரூபவ் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கு மோதலில் சம்பந்தப்பட்ட சகல
தரப்பினரதும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு பற்றிய விவகாரம்
கையாளப்படவேண்டியது அவசியம். ஆகவே வழக்கு தொடுக்கும் ஆணை இல்லாத
தென்னாபிரிக்க பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவா அல்லது
வழக்கு தொடுக்கும் ஆணையுடன் கூடிய சியராலியோன் பாணியிலான ஆணைக்குழுவா
இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது என்பது முக்கிய விடயமாகின்றதுரூபவ்
வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு 1995ஆம் ஆண்டில்
தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அது
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் அந்தப் பாதிப்பைச் செய்தவர்களிடம் இருந்தும்
சான்றுகளைச் சேகரிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தது. தனிப்பட்டவர்கள் மீது
வழக்கு தொடுப்பதில் அது கவனம் செலுத்தவில்லை.
ஆனால் இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரைப் பொறுத்தவரையில்
மேற்படி முறைமையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில்
தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூறப்பட வேண்டியதற்காக
நீதிவிசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்கள்
மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.
ஆகவேரூபவ் வழக்கு ஆணையுடன் கூடிய சியராலியோன் பாணியிலான ஆணைக்குழு தான்
தமக்கு பொருத்தமானது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். ஆனால்
எம்முறையான ஆணைக்குழு என்பதை தீர்மானிப்பது அதிகாரத்தின் பொறுப்பாகும்.
அடுத்து ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறவிருக்கின்ற நிலையில் அரசியல்
அதிகாரத்தில் உள்ளவர்களும் சரி அடுத்து அதிகாரத்துக்கு வருவதற்காக போட்டியில்
இறங்கப்போகின்றவர்களும் சரி நிச்சயமாக எந்தவொரு முறைமையிலான
ஆணைக்குழுவையும் நடைமுறையில் வினைத்திறனாகச் செயற்பட இடமளிக்க மாட்டார்கள்
என்பது இலங்கை அரசியல் கலாசாரத்தின் படிப்பினையாகவுள்ளது.
அத்;துடன் இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது
வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில்ரூபவ் புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை

மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக
நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன?
வெளிப்படையாக பேசும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலதரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு
உள்ளாகிவரும் பின்னணியில்ரூபவ் அவர்களை மீண்டுமொரு முறை ஆணைக்குழுவின்
முன்னிலையில் ஆஜராகுமாறு கோருவது நியாயமானதா? போன்ற கேள்விகளும்
கரிசனைகளும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் உள்ளன.